×

போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடன் வங்கியில் கடந்த 13ம் தேதி 31.7 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அதே வங்கியில் பணிபுரிந்த மண்டல மேலாளர் முருகன் (29), இவரது கூட்டாளிகளான சந்தோஷ் (30), பாலாஜி (28,) செந்தில்குமரன் (38), வட்சன், சூரியபிரகாஷ் (29) ஆகியோருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் அமல்ராஜ் கொள்ளையர்களுக்கு உதவியது தெரிந்தது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, 31.7 கிலோ தங்க நகைகளை மீட்டனர். விரைந்து செயல்பட்டு, வங்கி கொள்ளையர்களை பிடித்த கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையிலான இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர்  துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், கோபாலகுரு, கிருபாநிதி, சிபுகுமார் சிவகுமார், வேல்முருகன், ஜெயசந்திரன், பிரபு, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோரை நேற்று டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். …

The post போலீசாருக்கு டிஜிபி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,Razak Garden, Arumbakkam, Chennai ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம்...